×

இந்தியாவில் ஜனநாயகம் இல்லை: சரத்பவார் காட்டம்

மும்பை: மும்பையில் உள்ள ஒய்பி சவான் அரங்கில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சரத் பவார் பேசியதாவது:என்னுடைய வெற்றியும் பலமும், தொண்டர்கள்தான். மாற்று அணியினர் என் படத்தை பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் அவர்களுடைய முகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள். என்னுடைய படத்தை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கிறேன். எங்கள் கட்சியின் சின்னம் கடிகாரம். அது எங்கேயும் போகாது. போகவும் விடமாட்டேன். மகாராஷ்டிராவில் என்னநடக்கிறது என்பதை நாடே கவனித்துக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

சாதாரண மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். சில நாட்களுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மீது பிரதமர் நரேந்திர மோடி ஊழல் புகார் கூறினார். அவர்களையே இன்று அமைச்சர்கள் ஆக்கியுள்ளார். பிரதமரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. பிரதமர் நாட்டைத்தான் பிரதிநிதிப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அரசியல் கட்சியை அல்ல. அஜித் பவார் மக்களை முட்டாள் ஆக்குகிறார். அவர் முறையான வழிகளை பின்பற்றமாட்டார். பாரதிய ஜனதாவுடன் சேர்ந்தவர்களுக்கு எதிர்காலம் இல்லை. மக்களை பிளவுபடுத்த பாரதிய ஜனதா முயற்சிக்கிறது.

The post இந்தியாவில் ஜனநாயகம் இல்லை: சரத்பவார் காட்டம் appeared first on Dinakaran.

Tags : India ,Saratbarwar Ghagam ,Mumbai ,Sarath Bawar ,YP Sawan ,Saratbarwar Katham ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...